சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021 ஆண்டு கண்ணோட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை.

Posted On: 29 DEC 2021 5:52PM by PIB Chennai

செயல்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை மாற்றுத்திறனாளிகள் வாழும் வகையில் அவர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் மேம்பாடுகளுடன் கூடிய அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவது மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் நோக்கமாகும்.

 

2021-ம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் பல்வேறு முன்முயற்சிகள், சாதனைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் "இந்திய சைகை மொழி" குறித்த அலங்கார வாகனம் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு கவனம் பெற்றது.

 

பெஞ்ச்மார்க்’ குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு ஏற்றதாக அடையாளம் காணப்பட்ட பதவிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

 

10,000 சொல்லாடல்களுடன் கூடிய இந்திய சைகை மொழி அகராதியின் 3வது பதிப்பு வெளியிடப்பட்டது.

 

"சுகம்யா பாரத் செயலி" தொடங்கப்பட்டது மற்றும் "ஆக்சஸ் - தி ஃபோட்டோ டைஜெஸ்ட்" எனும் கையேடு வெளியிடப்பட்டது

 

சமூக அடிப்படையிலான ஆறு மாத கால உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

 

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பகால தலையீட்டு மையங்கள் திறக்கப்பட்டன.

 

இந்திய சைகை மொழியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாற்றியமைக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் டிஜிட்டல் வடிவம் சைகை மொழி நாளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் இந்திய அணியினர்களை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கவுரவித்தது.

 

பல்வேறு நிலை அதிகாரிகளுக்கான மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த பயிற்சி தொகுதிகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கான மத்திய அமைச்சர் டாக்டர். வீரேந்திர குமார் வெளியிட்டார்.

 

விமானப் போக்குவரத்துத் துறையில் அணுகலை மேம்படுத்துவதற்கான விமான நிலையங்கள் மற்றும் விமானப் பயணத் தொடரின் இரண்டாவது தொகுதியை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரும் விமானப் போக்குவரத்து அமைச்சரும் கூட்டாக வெளியிட்டனர்.

 

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கு ஆற்றப்பட்ட சிறந்த பணிகளுக்காக தேசிய விருதுகளை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786111

                                                                                *********************

 

(Release ID: 1786111)

 


(Release ID: 1786161) Visitor Counter : 259


Read this release in: Hindi , Urdu , English