சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின் முழு ஆணையத்தின் கூட்டத்தை அதன் தலைவர் இக்பால் சிங் லால்புரா இன்று புதுதில்லியில் நடத்தினார்
प्रविष्टि तिथि:
29 DEC 2021 4:12PM by PIB Chennai
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின் புதுதில்லியில் இன்று நடைபெற்ற முழு ஆணையத்தின் கூட்டத்திற்கு அதன் தலைவர் இக்பால் சிங் லால்புரா தலைமை தாங்கினார். முஸ்லீம், புத்த மதம், சமண மதம், பார்சி மதம் ஆகியவற்றின் உறுப்பினர்களை திரு லால்புரா வரவேற்றார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. சிறுபான்மையினரின் கல்வி முறை, அனைத்து சமூகங்களின் சமயம் சார்ந்த நூல்கள் தயாரிப்பு, ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்த்து போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை தாமாக முன்வந்து ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு குழுக்கள் அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை கோரப்படும். அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786066
••••••••••••••
(रिलीज़ आईडी: 1786136)
आगंतुक पटल : 244