அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய-மேற்கு இந்தியா மற்றும் வட இந்தியாவில் பெருந்தொற்றின் போது காற்று மாசு அதிகரிப்பு
Posted On:
27 DEC 2021 6:14PM by PIB Chennai
பெருந்தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் போது பொருளாதார நடவடிக்கைகள் குறைந்ததன் விளைவாக இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காற்று மாசுபாடு குறைந்த போதிலும், மத்திய-மேற்கு இந்தியா மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகள் மாசுபாடு அதிகரித்துள்ளதாக செயற்கைக்கோள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிநவீன செயற்கைக்கோள் கண்காணிப்புகளின் அடிப்படையில் இந்தியாவின் மத்திய-மேற்கு மற்றும் வட இந்தியாவில் உள்ள பகுதிகள் அதிக காற்று மாசுபாட்டிற்கு ஆளாகின்றன என்றும் அதனால் சுவாசப் பிரச்சனைகள் அதிகம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் நிறுவனம், 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான இயூமெட்சாட் மற்றும் நாசா செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டது.
ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் நிறுவனம் நைனிட்டாலின் மூத்த ஆராய்ச்சியாளரான திரு. பிரஜ்வல் ராவத் தலைமையில் அவரது ஆராய்ச்சி மேற்பார்வையாளர் டாக்டர் மணீஷ் நஜாவுடன் சேர்ந்து நடைபெற்ற ஆய்வு, இந்தியாவின் மத்திய-மேற்குப் பகுதியில் சுமார் 15%. ஓசோன், கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றின் அதிகரிப்பைக் காட்டியது.
ஆய்வு வெளியீட்டின் இணைப்பு: https://link.springer.com/article/10.1007/s11356-021-17441-2
மேலும் தகவல்களுக்கு டாக்டர் மணீஷ் நஜாவை manish@aries.res.in எனும் மின்னஞ்சல் முகவரியில் அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785581
************
(Release ID: 1785640)
Visitor Counter : 223