நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காரிப் பருவத்தில் 443.49 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாட்டில் 95310 விவசாயிகள் பயனடைந்தனர்

Posted On: 27 DEC 2021 4:29PM by PIB Chennai

2021-22 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டது போல் சீராக நடந்து வருகிறது.

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு & காஷ்மீர், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 26.12.2021 வரை 2021-22 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில் 443.49 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2021-22 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில் இது வரை ரூ 86,924.46 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையில் 47.03 லட்சம் விவசாயிகள் நாடு முழுவதும் இதுவரை பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 2021-22 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில் 2021 டிசம்பர் 26 வரை ரூ 1338.38 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையில் 682845 மெட்ரிக் டென் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 95310 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785531

------


(Release ID: 1785588) Visitor Counter : 228