மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
குழந்தைகளை பள்ளிகளை நோக்கி ஈர்ப்பதற்கான திட்டம்.
Posted On:
22 DEC 2021 5:08PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி இணை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
சமக்ர சிக்ஷா எனும் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை 2018-19 முதல் இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முன்பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வித் துறைக்கான விரிவான திட்டமாக, கிராமப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பள்ளிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், உலகளாவிய அணுகல், பாலின சமத்துவத்தை கொண்டு வருதல், உள்ளடக்கிய கல்வி, கல்வியின் தரம், ஆசிரியர்களின் ஊதியத்திற்கான நிதியுதவி, டிஜிட்டல் முயற்சிகள், குழந்தைகளுக்கான உரிமையை செயல்படுத்துதல், கல்வி உரிமை சட்டம், இலவச சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்குதல், முன்பள்ளி கல்வி, தொழிற்கல்வி, விளையாட்டு மற்றும் உடற்கல்வி, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்களை நிறுவுதல், நடத்துதல் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இத்திட்டம் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஆதரவை வழங்குகிறது.
பிரதமரின் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை, தக்கவைப்பு மற்றும் வருகையை அதிகரிக்கவும், அதே நேரத்தில் அவர்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தவும் தொடக்க நிலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
தேசிய மீன்ஸ்-கம்-மெரிட் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 9-12 வகுப்புகளில் பயிலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளை சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு அவர்களின் இடைநிறுத்தத்தைத் தடுக்கவும், இரண்டாம் நிலைப் படிப்பைத் தொடர ஊக்குவிக்கவும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் திறமையான குழந்தைகளுக்கு தரமான நவீன கல்வியை வழங்கும் நோக்கத்துடன் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் 75% இடங்கள் கிராமப்புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களால் நிரப்பப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784248
******************************
(Release ID: 1784391)
Visitor Counter : 151