பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாயத்ராஜ் அமைப்புக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரங்கள் மற்றும் நிதிகள்.

प्रविष्टि तिथि: 22 DEC 2021 3:50PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பஞ்சாயத்ராஜ் இணை அமைச்சர் திரு. கபில் மோரேஷ்வர் பாடில்  கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களை வகுப்பதற்காக நிபந்தனைகளுக்கு உட்பட்டு பஞ்சாயத்துகளுக்கு அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் வழங்குவதற்கு மாநிலங்களின் சட்டசபைகளுக்கு இந்திய அரசியலமைப்பின் 243 ஜி பிரிவு அதிகாரம் அளிக்கிறது. இவ்வாறு செய்யும் போது பதினொன்றாம் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி ஒன்பது பிரிவுகளை மாநில சட்டசபைகள் கருத்தில் கொள்ள வேண்டும். பஞ்சாயத்துக்களின் செயல்பாடுகள் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் ஆதாரங்களை சார்ந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புக்களான பஞ்சாயத்துக்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருவதால் அவற்றுக்கு அதிக அதிகாரங்களை வழங்குமாறு மாநிலங்களுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது.

அதேபோன்று, தொடர்ந்து அமைக்கப்பட்ட நிதி ஆணையங்கள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வழங்குவதற்கான கூடுதல் நிதிகளை மாநிலங்களுக்கு வழங்கி வருகின்றன.

நிதி ஆணையங்களால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு,                  இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784195

                                                                                *************************

 

 

 


(रिलीज़ आईडी: 1784341) आगंतुक पटल : 288
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi