வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சரக்குப் பெட்டகங்களுக்கு உலகளாவிய பற்றாக்குறை

प्रविष्टि तिथि: 22 DEC 2021 3:05PM by PIB Chennai

சரக்குப் பெட்டக பற்றாக்குறை மற்றும் அதிக சரக்குக் கட்டணப் பிரச்சனைக்குத் தீர்வு காண பல்முனை அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை, ரயில்வே அமைச்சகங்கள், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மற்றும் இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, சரக்குப் பெட்டக உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அரசு நிர்ணயித்துள்ள ஏற்றுமதி இலக்குகளை அடையும் விதமாக, ஏப்ரல் முதல் நவம்பர் 2021 வரையிலான காலத்தில் வணிக ரீதியான ஏற்றுமதி 2020-ல் இருந்ததை விட 51% அதிகரித்து, 263.57 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதியாகி உள்ளது. பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதியும் கடந்த ஆண்டை விட 42% அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தக தொழில்துறை இணையமைச்சர் திரு.சோம் பிரகாஷ் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

*****


(रिलीज़ आईडी: 1784253) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu