கனரகத் தொழில்கள் அமைச்சகம்
இந்திய சாலைகளில் 8.77 லட்சம் மின்சார வாகனங்கள்: மக்களவையில் தகவல்
प्रविष्टि तिथि:
21 DEC 2021 3:38PM by PIB Chennai
மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் திரு. கிரிஷன் பால் குர்ஜார் மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மின்சார வாகன இணையளத்தில் உள்ள தகவல் படி, தற்போது இந்திய சாலைகளில் 8.77 லட்சம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இரண்டாம் கட்ட பேம் இந்தியா திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. மேலும் மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தியுடன் தொடர்புடைய, இரண்டு ஊக்குவிப்பு திட்டங்களையும், கனரக தொழில்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783826
************
(रिलीज़ आईडी: 1784023)
आगंतुक पटल : 285