விவசாயத்துறை அமைச்சகம்
சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டம்
Posted On:
21 DEC 2021 5:08PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் -நிகோபார் தீவுகள் உட்பட நாட்டில் பாமாயில் உற்பத்திக்கான சாத்தியங்களை மதிப்பிடுவது குறித்த ஆராய்ச்சியை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - இந்திய பாமாயில் ஆராய்ச்சி கழகத்தின் மறுமதிப்பீட்டு குழு கடந்த 2020ம் ஆண்டு மேற்கொண்டன. இந்தியாவில் மொத்தம் 22 மாநிலங்களில், 27.99 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாமாயில் மரங்கள் வளர்க்க சாத்தியம் என அடையாளம் காணப்பட்டன.
மழை பெய்யும் பகுதிகளில், பாமாயில் மரங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 150 மி.மீ வீதம், 1800 மி.மீ மழைப்பொழிவு தேவைப்படுகிறது. நீர்ப்பாசன வசதி இருந்தாலும், பாமாயில் மரங்களுக்கு மழைப் பொழிவு முக்கியமான அம்சமாக உள்ளது.
நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம் - பாமாயில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.11,040 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.8,844 கோடி. மாநிலங்களின் பங்கு ரூ.2,196 கோடி. பாமாயில் மரங்கள் வளர்ப்புக்கு வனப்பகுதி நிலங்கள் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783878
*******
(Release ID: 1784019)
Visitor Counter : 243