சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆரம்ப சுகாதார மையங்கள் பற்றிய சமீபத்திய புள்ளி விவரங்கள்

Posted On: 21 DEC 2021 3:04PM by PIB Chennai

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் 30,000 மக்கள் தொகை கொண்ட  கிராமப்  பகுதிகளிலும், 20,000 மக்கள் தொகை கொண்ட மலைப்பகுதிகள், பழங்குடியினர் பகுதிகள் மற்றும் பாலைவனங்களிலும் ஆரம்ப சுகாதார மையங்கள்  அமைக்கப்படுகிறது.  

2019-20 ஊரக சுகாதாரப் புள்ளி விவரங்களின்படி, 31.03.2020 வரை 24,918 ஊரக ஆரம்ப சுகாதார மையங்களும், 5,895 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களும், நாட்டில் செயல்பட்டு வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலம் வாரியாக செயல்பட்டு வரும் ஆரம்பசுகாதார நிலையங்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 1,420 ஆரம்ப சுகாதார மையங்களும், நகர்ப்புறங்களில் 464 ஆரம்ப சுகாதார மையங்களும் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783809

 

-----(Release ID: 1783973) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Marathi , Telugu