கலாசாரத்துறை அமைச்சகம்
அறிவியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்க புதிய அறிவியல் மையங்கள் திட்டம்: மக்களவையில் தகவல்
Posted On:
20 DEC 2021 5:48PM by PIB Chennai
மத்திய கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி மக்களவையில், தாக்கல் செய்தபதிலில் கூறியதாவது:
அறிவியல் கலாச்சார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் அருங்காட்சியங்களுக்கான தேசிய கவுன்சில், நாடு முழுவதும் அறிவியல் நகரங்களையும் / மையங்களையும் உருவாக்கியுள்ளது.
மாநில அரசுகளின் வேண்டுகோள் மற்றும் சில உறுதிப்பாடுகளின் அடிப்படையில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டின் பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் புதிய திட்டங்கள் கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. கேரளாவின் கோட்டயத்தில் மண்டல அறிவியல் மையத்தை அறிவியல் அருங்காட்சியங்களுக்கான தேசிய கவுன்சில் அமைத்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783521
*****************************
(Release ID: 1783675)