கலாசாரத்துறை அமைச்சகம்
பொது நூலகங்களில் இடவசதியை அதிகரிக்க, மத்திய கலாச்சார அமைச்சகம் நிதியுதவி
இடுகை இடப்பட்ட நாள்:
20 DEC 2021 5:47PM by PIB Chennai
மத்திய கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ஜி.கிஷன் ரெட்டி மக்களவையில், தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம், மத்திய நூலகம், புதுதில்லியில் உள்ள மத்திய செயலக நூலகம், தில்லி பொது நூலகம், குதா பக்ஷ் ஓரியண்டல் பொது நூலகம், பாட்னா மற்றும் ராம்பூர் ரசா நூலகம் ஆகிய 6 பொது நூலகங்கள் செயல்படுகின்றன.
நூலகங்கள் மாநிலங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்குபவை. ஆனாலும், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ,கொல்கத்தாவில் உள்ள ராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை, பொது நூலகங்களுக்கு இட வசதியை அதிகரிக்க தேவையான நிதி உதவி வழங்குகிறது.
நூலகங்களுக்கான தேசிய திட்டத்தை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதில் உள்ளகட்டமைப்பு மேம்பாட்டு பிரிவின் கீழ், மாநில மத்திய நூலகம் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஒரு மாவட்ட நூலகத்துக்கு கட்டமைப்பு மேம்பாட்டுக்காக நிதியளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783518
************************************
(வெளியீட்டு அடையாள எண்: 1783672)
வருகையாளர் எண்ணிக்கை : 222