சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ரூ. 4160 கோடி மதிப்பிலான 232 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளை உத்தரப்பிரதேசத்தில் திரு. நிதின் கட்கரி அடிக்கல் நாட்டியும் திறந்தும் வைத்தார்,
Posted On:
20 DEC 2021 5:20PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மற்றும் மிர்சாபூரில் ரூ. 4160 கோடி செலவிலான 232 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டியும் திறந்தும் வைத்தார். உத்தரப் பிரதேச முதல்வர் திரு .யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிகளில் உரையாற்றிய திரு. கட்கரி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து வலியுறுத்தினார். உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார் அவர்.
சாலைத் திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, பிராந்தியத்தில் சிறந்த இணைப்பை வழங்கி, மாநிலத்தின் வளர்ச்சியின் வேகத்தை இரட்டிப்பாக்கும் என்று அவர் கூறினார்.
பிராந்தியத்தில் சிறந்த இணைப்புடன் சரக்குகளின் போக்குவரத்தை இந்த சாலைத் திட்டங்கள் எளிதாக்கும் என்று அமைச்சர் கூறினார். விவசாய பொருட்கள், உள்ளூர் மற்றும் பிற பொருட்களுக்கான சந்தைகளுக்கு, அணுகலையும் இது எளிதாக்கும் என்றார் அவர்.
ஜான்பூரில் திரு.கட்கரி 3 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 1,123 கோடி ரூபாய் செலவில் 86 கிலோமீட்டரில் இவை கட்டமைக்கப்படும்.
மிர்சாபூரில், மொத்தம் 146 கிமீ நீளம் கொண்ட ரூ 3037 கோடி மதிப்பிலான நான்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை திரு. கட்கரி தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783505
********************************
(Release ID: 1783659)
Visitor Counter : 167