மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
முழுமையான கல்வி திட்டம்
Posted On:
20 DEC 2021 4:57PM by PIB Chennai
மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திருமதி .அன்னபூர்ணா தேவி, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் கூறியதாவது:
அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதற்காக, தேசிய கல்வி கொள்கை 2020 பரிந்துரையின்படி, ‘சமக்ர சிக்ஷா’ என்ற முழுமையான கல்வி திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2026 மார்ச் 31ம் தேதி வரை தொடர்கிறது. இது தொடர்பாக மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுடன் தொடர் ஆலோசனைகள் நடத்தப்பட்டு கருத்துக்கள் பெறப்பட்டன. மாற்றியமைக்கப்பட்ட முழுமையான கல்வி திட்டம் மற்றும் இதற்கான நிதி விதிமுறைகள் அனைத்து தரப்பினரிடமும் பகிரப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட முழுமையான கல்வி திட்டத்தை https://samagra.education.gov.in/docs/samagra_shiksha.pdf என்ற இணையதளத்தில் காணலாம். இது மாநில அளவில் மாநில அமலாக்க அமைப்பு(எஸ்ஐஎஸ்) மூலம் மத்திய அரசின் திட்டமாக அமல்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783479
***************************************
(Release ID: 1783620)
Visitor Counter : 137