பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசால்ட் ரைஃபில்ஸ் தொடர்பாக ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்

Posted On: 20 DEC 2021 3:00PM by PIB Chennai

6,01,427 ஏகே -203 அசால்டட் ரைஃபில்கள் கொள்முதல் செய்வதற்கான உடன்பாடு டிசம்பர் 6, 2021 அன்று கையெழுத்தானது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்தியா-ரஷ்யா இடையே கூட்டு முயற்சி  பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்கள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிறுவனங்களில் முறையே 50.5%  மற்றும் 49.5% பங்குகள் உள்ளன. இந்த ரைஃபில்கள் உத்தரப்பிரதேசத்தின் கோர்வாவில் உள்ள ஐஆர்ஆர்இஎல் தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளன.

மாநிலங்களவையில் இன்று பாதுகாப்புத்துறை இணையமைச்சர்  திரு அஜய்பட் எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

*****(Release ID: 1783568) Visitor Counter : 106


Read this release in: English , Urdu