குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
உத்தரப் பிரதேசத்தின் புந்தல்கண்ட் பகுதியில் ஊரக கலைஞர்களின் மேம்பாட்டுக்கு சுயவேலைவாய்ப்பு திட்டங்கள்: காதி கிராம தொழில் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
Posted On:
19 DEC 2021 4:32PM by PIB Chennai
காதி கிராம தொழில் ஆணையத்தின் சுய வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் இணைந்ததன் மூலம், உத்தரப் பிரதேசத்தின் புந்தல்கண்ட் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், சுயசார்பை நோக்கி முன்னேறியுள்ளனர். ஜான்சியில் ஞாயிறு அன்று நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணையமைச்சர் திரு. பானு பிரதாப் சிங் வர்மா, புந்தல்கண்ட் பகுதியில் ஜான்சி மாவட்டம் மற்றும் அதனையொட்டியுள்ள ஊரக கலைஞர்களுக்கு பானை செய்யப் பயன்படும் மின்சார சக்கரம், தேனீ வளர்ப்பு பெட்டி மற்றும் அகர்பத்தி இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார். ஜான்சி எம்.பி. திரு அனுராக் சர்மாவும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய அரசின் முன்னணி திட்டமான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டமும் (PMEGP) இந்நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.
காதி கிராம தொழில் ஆணையத்தின் 200 தேனீ வளர்ப்பு பெட்டிகள், பானை செய்ய பயன்படும் 100 மின்சார சக்கரங்கள், 50 அகர்பத்தி இயந்திரங்கள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. இது உள்ளூரைச் சேர்ந்த 600 பேருக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இதற்காக, பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று தொழில் பயிற்சிகளை காதி கிராம தொழில் ஆணையம் வழங்கியுள்ளது.
காதி கிராம தொழில் ஆணையத்தின்(கேவிஐசி) முயற்சிகளை மத்திய அமைச்சர் திரு. வர்மா பாராட்டினார். கேவிஐசி தலைவர் திரு. வினய் சக்சேனா பேசுகையில், கேவிஐசி யின் இந்த திட்டங்கள் ஏழைகளை மேம்படுத்தும் என்றார்.
கடந்த 3 ஆண்டுகளில், புந்தல்கண்ட் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குயவர் குடும்பங்களை மேம்படுத்தி, 1,200 பேருக்கு வாழ்வாதாரத்தை கேவிஐசி வழங்கியுள்ளது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்துக்கு, கேவிஐசி மிகப் பெரிய உந்துதலை அளித்து, புந்தல்கண்ட் பகுதியில் 11,000 புதிய உற்பத்தி நிலையங்களை உருவாக்கி 8,800 நேரடி வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. இந்த திட்டங்களுக்கு உதவ, கேவிஐசி ரூ.75 கோடி மானியம் வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783229
*****************
(Release ID: 1783243)