பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
அங்கன்வாடிகளுக்கு கூடுதல் நிதி
Posted On:
17 DEC 2021 3:17PM by PIB Chennai
தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வறிக்கை – 4 உடன் ஒப்பிடுகையில், தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வறிக்கை 5-ல், எடைக் குறைவு போன்றவற்றுக்கான 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 15 – 49 வயதுடைய பெண்களிடையே ரத்தசோகை பாதிப்பு அதிகரித்திருப்பதும் புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, ஊட்டச்சத்து தரம் மற்றும் பரிசோதனையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்ஃ
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைளைக் கண்டறிந்து அவர்களை மருத்துவமனைகள் மற்றும் ஆயுஷ் மையங்களுக்கு அனுப்பி வைக்குமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊட்டச்சத்து இயக்கம் 2.0 எனப்படும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டம் 2021-22 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதுடன் உரிய நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
-----
(Release ID: 1782803)
Visitor Counter : 153