ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

உயிர் காக்கும் மருந்துகள் குறித்த விழிப்புணர்வுக்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள்

Posted On: 17 DEC 2021 5:56PM by PIB Chennai

நாடு முழுவதும் டிசம்பர் 12, 2021 அன்றைய நிலவரப்படி 8578 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் (பிரதம மந்திரி பாரதிய ஜன் அவுஷாதி கேந்திரா) செயல்பட்டு வருகின்றன . இதில் தமிழகத்தில் 862 மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

உயிர் காக்கும் மருந்துகள் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை, கவுஹாத்தி, குர்காம் ஆகிய 3 இடங்களில் மருந்து கிடங்குகளும், 39 விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மருந்து மற்றும்  மருத்துவக்  கருவிகள் அலுவலகம் சார்பில் பிரதம மந்திரி மக்கள் மருந்தகத்  திட்டம் குறித்து தொலைக்காட்சி, வானொலி , சினிமா, டிஜிட்டல் விளம்பரம், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டம் குறித்து மக்களுக்குத்  தெரியப்படுத்தும் வகையில், இந்த அலுவலகம் பயிற்சிப் பட்டறை, கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தி வருகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் சாதனைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7ஆம் தேதி மக்கள் மருந்தக தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா மக்களவையில் இன்று கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்  தெரிவித்தார்.

 

                                                                                *************



(Release ID: 1782772) Visitor Counter : 195


Read this release in: English , Urdu