பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சிறார் சீர்திருத்த பள்ளிகளின் செயல்பாடு குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ச்சியாக அறிவுறுத்துகிறது
Posted On:
17 DEC 2021 3:21PM by PIB Chennai
சிறார் நீதி சட்டம்-2015, குழந்தைகளின் பாதுகாப்பு, பத்திர நிலைமை, கவுரவம் மற்றும் நலனை உறுதி செய்கிறது: கவனிப்பு, பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் சட்ட வழக்குகளில் சிக்குபவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை இச்சட்டம் வழங்குகிறது. மத்திய அரசின் திட்டமான குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள்(சிபிஎஸ்) திட்டத்தின் கீழ், சிறார் நீதி சட்டப் படி சிக்கலான சூழ்நிலையில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான சேவைகளை வழங்க மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது. சிறார் நீதிச் சட்டத்தை அமல்படுத்தும் முக்கியப் பொறுப்பு, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது.
சிறார் நீதி சட்டத்தின் 54வது பிரிவின் படி, மாநில அரசுகள் ஆய்வுக்குழுக்களை அமைத்து, சிறார் சீர்திருத்த பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
சிறார் சீர்திருத்த பள்ளிகள், சிறார் நீதிச் சட்டப்படி விதிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்ய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 2006, 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள், 21 வயதுக்கு உட்பட்ட ஆண்களின் திருமணத்தை தடுக்கிறது. இந்த சட்டப்படி குழந்தை திருமணம் என்பது ஜாமீனில் வெளி வரமுடியாத குற்றமாகும் .
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
*****
(Release ID: 1782757)