பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
17 DEC 2021 3:21PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இராணி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் கீழ் எடை குறைந்த, ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21)-ன் சமீபத்திய அறிக்கையின்படி, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 (2015-16) உடன் ஒப்பிடும்போது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறிகாட்டிகள் மேம்பட்டுள்ளன.
வளர்ச்சி குன்றிய நிலை 38.4%-ல் இருந்து 35.5% ஆகவும், விரயம் 21.0% -ல் இருந்து 19.3% ஆகவும் குறைந்துள்ளது. எடைக் குறைவு பாதிப்பு 35.8%-ல் இருந்து 32.1% ஆகக் குறைந்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டின் சவால்களை எதிர்கொள்வதற்காக, ஊட்டச்சத்து தரம் மற்றும் பரிசோதனையை மேம்படுத்தவும், விநியோகத்தை வலுப்படுத்தவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ஊட்டச்சத்து இயக்கம் 2.0-ன் கீழ், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 2021-2022 பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் நடைமுறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் ஊட்டச்சத்து சார்ந்த உள்ளடக்கம், விநியோகம், சென்றடைவு மற்றும் விளைவுகள் ஆகியவற்றை வலுப்படுத்த இது முயற்சி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782635
*****
(रिलीज़ आईडी: 1782753)
आगंतुक पटल : 283