சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் முக்கிய சாதனைகள்: தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரம்
Posted On:
17 DEC 2021 2:31PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அவர்களின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை இந்திய அரசு வழங்குகிறது.
தேசிய ஊரக சுகாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கங்களின் கீழ் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் சுகாதாரத் துறையை வலுப்படுத்த அல்லது மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட/விடுவிக்கப்பட்ட/பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் பின்வருமாறு:
தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2019-20-ம் ஆண்டு ரூ 1349.28 கோடி வழங்கப்பட்டு, ரூ கோடி 2432.96 கோடி செலவிடப்பட்டுள்ளது, 2020-21-ம் ஆண்டு ரூ 1437.32 கோடி வழங்கப்பட்டு, ரூ 2049.33 கோடி செலவிடப்பட்டுள்ளது, 2021-22-ம் ஆண்டு ரூ 317.18 கோடி வழங்கப்பட்டு, ரூ 1023.75 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2021 நவம்பர் 24 வரையிலானது ஆகும். இந்த வருடத்திற்கான மத்திய அரசின் மொத்த ஒதுக்கீடு ரூ 1445.44 கோடி ஆகும்
தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2019-20-ம் ஆண்டு ரூ 74.94 கோடி வழங்கப்பட்டு, ரூ கோடி 124.66 கோடி செலவிடப்பட்டுள்ளது, 2020-21-ம் ஆண்டு ரூ 85.39 கோடி வழங்கப்பட்டு, ரூ 123 கோடி செலவிடப்பட்டுள்ளது, 2021-22-ம் ஆண்டு ரூ 39.65 கோடி வழங்கப்பட்டு, ரூ 16.82 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2021 நவம்பர் 24 வரையிலானது ஆகும். இந்த வருடத்திற்கான மத்திய அரசின் மொத்த ஒதுக்கீடு ரூ 87.76 கோடி ஆகும்.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை மனிதவள மேம்பாடு 30804 ஆகவும், செயல்பாட்டில் உள்ள முதல் அணுகல் மருத்துவ மையங்களின் எண்ணிக்கை 577 ஆகவும், செயல்பாட்டில் உள்ள நடமாடும் மருத்துவ மையங்களின் எண்ணிக்கை 420 ஆகவும், அவசரகால ஊர்திகளின் எண்ணிக்கை 1113 ஆகவும், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 4309 ஆகவும், 24x 7 செயல்படும் ஆரம்ப சுகாதார மையங்களின் எண்ணிக்கை 1316 ஆகவும், நோயாளி நலக் குழுக்களின் எண்ணிக்கை 2577 ஆகவும், கிராமப்புற சுகாதார மற்றும் ஊட்டச்சத்து குழுக்களின் எண்ணிக்கை 15015 ஆகவும் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782603
*********
(Release ID: 1782705)
Visitor Counter : 760