சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலை திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தல்: சென்னை துறைமுகம்-மதுரவாயல் விரைவுச்சாலை குறித்த தகவல்கள்.
Posted On:
16 DEC 2021 2:38PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
தேசிய நெடுஞ்சாலைகள், புறவழிச்சாலை அல்லது வட்ட சாலைகளை நிர்மாணிப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும் மதிப்பு பிடிப்பு (வேல்யூ காப்சர் ) நிதி மாதிரியானது பயன்படுத்தப்படவில்லை.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 18.03.2021 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, திட்டச் செலவை அந்தந்த மாநில அரசு/ யூனியன் பிரதேசத்துடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டில் வேல்யூ காப்சர் நிதி மாதிரி தொடர்பான கொள்கையை வெளியிட்டுள்ளது. அக்கொள்கையின் சில முக்கிய அம்சங்கள்/விவரங்கள் பின்வருமாறு:
* மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் திட்ட வசதி
* நிலம் மூலம் பங்களிப்பு
* ராயல்டி/வரிகள் போன்றவற்றை தள்ளுபடி செய்தல்/ திரும்பப் பெறுதல்
* திட்ட தாக்க பகுதியில் நிலத்தின் மேம்படுத்தப்பட்ட மதிப்பைப் பகிர்தல்
* திட்ட தாக்க மண்டலத்தில் குடியிருப்பு/வணிக ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.
மேலும், மேம்பாடு, பராமரிப்பு, தேசிய நெடுஞ்சாலைகளின் மேலாண்மை, கடனைத் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றுக்கு சாலைகளின் பணமாக்குதலின் மூலம் கிடைக்கும் வருவாய் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, கீழ்காணும் திட்டத்திற்கு வேல்யூ காப்சர் நிதி ஆதரவு உள்ளது:
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 4 வழி பறக்கும் சாலை. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஆர்&ஆர் செலவு ரூ 470 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ரூ 235 கோடியை சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் பகிர்ந்து கொள்ளும். ரூ 235 கோடியை தமிழக அரசு பகிர்ந்து கொள்ளும். மேலும், நிலம் கையகப்படுத்துதலின் மற்ற அனைத்து கூடுதல் செலவினம் மற்றும் ஆர்&ஆர் தமிழ்நாடு அரசால் ஏற்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782181
***************
(Release ID: 1782448)
Visitor Counter : 191