உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல்
Posted On:
16 DEC 2021 5:12PM by PIB Chennai
நாட்டில் 8 பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன எனவும் 21 பசுமை விமான நிலையங்களுக்கு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனவும் மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி கே சிங் தெரிவித்தார். துர்காபூர், சீரடி, சிந்துதுர்க், பாக்கியாங், கண்ணூர், காலாபுராகி, ஒரவாக்கல் மற்றும் குஷி நகர் ஆகிய 8 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்க கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு இந்திய விமான நிலைய ஆணையத்துக்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் உள்ளது என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி கே சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782306
-------
(Release ID: 1782403)
Visitor Counter : 143