சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சேது பாரதம் திட்டம்

प्रविष्टि तिथि: 16 DEC 2021 2:46PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ரயில்வே கிராசிங்கிற்கு பதிலாக மேம்பாலங்கள் அல்லது சுரங்கப்பாதைகள் அமைப்பதற்காக சேது பாரதம் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

சேது பாரதம் திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள் அல்லது சுரங்கப்பாதைகளை மாநில பொதுப்பணித் துறைகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் மூலம் அரசு அமைக்கிறது.

இதர தேசிய நெடுஞ்சாலை பணிகள் போன்றே இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சேது பாரதம் திட்டத்தின் கீழ் 123 மேம்பாலங்கள்/சுரங்கப்பாதைகளை நிர்மாணிப்பதற்கான நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி அனுமதி இது வரை வழங்கப்பட்டுள்ளது.

மேம்பாலங்கள்/சுரங்கப்பாதைகள் சில நேரங்களில் தனித்த திட்டங்களாகவும் சில சமயங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் கட்டமைக்கப்படுகின்றன. எனவே, சேது பாரதம் திட்டத்தின் கீழ் மேம்பாலங்கள்/சுரங்கப்பாதைகள் கட்டுவதற்கான செலவின புள்ளிவிவரங்கள் தனித்தனியாக பராமரிக்கப்படுவதில்லை.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782187

********


(रिलीज़ आईडी: 1782364) आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu