சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பாரத்மால திட்டம் உட்புறம்
Posted On:
16 DEC 2021 2:43PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 2017 அக்டோபரில் இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன் மொத்த நீளம் சுமார் 34,800 கிலோமீட்டரும், திட்ட மதிப்பீடு ரூ 5,35,000.00 கோடியும் ஆகும்.
சுமார் 9,000 கிமீ நீள பொருளாதார வழித்தடங்கள், சுமார் 6,000 கிமீ நீள இடைவழி மற்றும் இணைப்பு சாலைகள், சுமார் 5,000 கிமீ நீள தேசிய வழித்தடங்களின் செயல்திறன் மேம்பாடுகள், சுமார் 2,000 கிமீ நீள எல்லையோர மற்றும் சர்வதேச இணைப்பு சாலைகள், சுமார் 2,000 கிமீ நீள நீளம் கடற்கரை மற்றும் துறைமுக இணைப்புச் சாலைகள், சுமார் 800 கிமீ நீளம் கொண்ட விரைவுச் சாலைகள் இத்திட்டத்தில் அடங்கும்.
பாரத்மாலா பரியோஜனா முதல் கட்டத்தின் கீழ் அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் 1,371 கிமீ நீளம் கொண்ட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, இதில் 27 கிமீ நீளத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் 3 தேசிய நெடுஞ்சாலைகள் (715கே, 137 மற்றும் 137ஜி) அறிவிக்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் பதர்பூர்காட்-மமித் சாலை மற்றும் சில்சார்-கனைல்பஜார் சாலை ஆகியவை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்கப்படவில்லை.
இணைப்புத் தேவை, முன்னுரிமை மற்றும் நிதியின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகளை அவ்வப்போது அறிவிப்பதை அமைச்சகம் பரிசீலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782182
******
(Release ID: 1782363)
Visitor Counter : 181