சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொது போக்குவரத்துக்கு ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் பரிசோதனை: நாடாளுமன்றத்தில் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 DEC 2021 1:37PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

ஹைட்ரஜனைவாகன எரிபொருளாக பயன்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்டது. இயற்கை எரிவாயுடன் 18 சதவீத ஹைட்ரஜன் கலப்பு குறித்து அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் உருவாக்கப்பட்டு, அது மத்திய அரசின் பரிசோதனை திட்டத்தில் உள்ளது. டாட்டா  மோட்டார்ஸ், இந்தியன் ஆயில், தில்லி ஐஐடி, மகிந்திரா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் வர்த்தக ரீதியாக, ஹைட்டரஜன் எரிபொருள் வாகனங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781651

                                                                                **************

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1781953) வருகையாளர் எண்ணிக்கை : 245
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu