பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம்: தமிழகத்துக்கு இதுவரை ரூ. 284.57 கோடி வழங்கல்.

प्रविष्टि तिथि: 15 DEC 2021 2:36PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி  இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5,000/ உதவித் தொகையை,  3 தவணைகளாக வழங்க பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அமல்படுத்துகிறது.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல், கடந்த மாதம் 22ம் தேதி வரை தமிழகத்துக்கு  மொத்தம் ரூ. 284.57 கோடி  வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 10,12,961 பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781676

                                                                                                *************

 

 


(रिलीज़ आईडी: 1781945) आगंतुक पटल : 262
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu