பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை

Posted On: 15 DEC 2021 2:38PM by PIB Chennai

தேசிய குற்ற ஆவணக் காப்பகம், குற்றச்செயல்கள் குறித்த தகவலைத் தொகுத்து “இந்தியாவில் குற்றச்செயல்கள்” என்ற வெளியீட்டில்  வெளியிடுகிறது.  குடும்ப வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களின் புள்ளி விவரங்கள் மாநிலம் வாரியாகவும், ஆண்டு வாரியாகவும் இந்த அறிக்கையில் இடம் பெறுகின்றன.

குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005ன்படி 2016 முதல் 2020 வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விவரங்கள் வருமாறு. 2016-ல் 437, 2017-ல் 616, 2018-ல் 579, 2019-ல் 553, 2020-ல் 446 என வழக்குகளின் எண்ணிக்கை உள்ளது. 2017 முதல் 2020 வரை குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 

காவல் துறை, பொது ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை உறுதி செய்ய மத்தி்ய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. இதன் அடிப்படையில் வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961 உட்பட பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  உள்கட்டமைப்பு, தொழில்நுட்பப் பயன்பாடு, விழிப்புணர்வு முகாம்கள் மூலம் சமூகத்தில் திறன் கட்டமைப்பு, புலனாய்வு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் ஆகியோருக்குப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உட்பட  8 நகரங்களில் (சென்னை, பெங்களூரு, தில்லி. அமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை) பாதுகாப்பான  நகரத்திட்டங்கள்,  செயல்படுத்தப்படுகின்றன..

மாநிலங்களவையில் இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஸூபின் இரானி  எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781679

------


(Release ID: 1781904)
Read this release in: English , Telugu