நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்க்கரைப் பருவத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளோடு தொடர்புடைய சுமார் 40 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

Posted On: 15 DEC 2021 2:49PM by PIB Chennai

அகில இந்திய அளவில் 2019-20 சர்க்கரைப் பருவத்தில் மொத்தம் 51.18 லட்சம் ஹெக்டேரிலும், 2020-21 சர்க்கரைப் பருவத்தில் 54.76 லட்சம் ஹெக்டேரிலும் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதே காலத்தில் கரும்பு உற்பத்தி முறையே  3968 மற்றும் 4376 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. மொத்த சர்க்கரை உற்பத்தி 2019-20-ல் 273.85 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், 2020-21-ல் 310 மெட்ரிக் டன்னாகவும் இருந்தது.

நாட்டில் 2019-20-ல் மொத்தம் 173 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 2020-21-ல் 190 சர்க்கரை ஆலைகளும் செயல்பட்டன. இதே காலத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை முறையே  11 மற்றும் 12 ஆக இருந்தது. 

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் மூலம் சர்க்கரைப் பருவத்தில் சுமார் 40 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மக்களவையில்இன்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக்காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781687

----


(Release ID: 1781898) Visitor Counter : 220
Read this release in: English