சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திருநங்கைகளுக்கு நல வாரியம்

Posted On: 15 DEC 2021 12:55PM by PIB Chennai

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2020 பிரிவு 10(1)-ன் படி, “திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கவும், அரசால் உருவாக்கப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற உதவும் வகையிலும், சம்பந்தப்பட்ட அரசு திருநங்கைகள் நல வாரியத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்”.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்தும்  உரிய நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் 09.10.2020 அன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள் மீது பாரம்பட்சம் காட்டுவதிலிருந்து அவர்களை பாதுகாக்கவும், அவர்களது நிலையை உயர்த்தவும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019-ஐ நிறைவேற்றியது. இந்தச் சட்டம் 10 ஜனவரி 2020 அன்று நடைமுறைக்கு வந்தது. இது மத்திய அரசின் அரசிதழிலும் 29 செப்டம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கென தேசிய அளவிலான இணையதளம் ஒன்றும், 25 நவம்பர் 2020 அன்று தொடங்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே திருநங்கை விண்ணப்பதாரர்கள் அடையாள சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அடையாள சான்றிதழ் வழங்கப்பட்டவர்கள், தங்களது பிறப்புச் சான்றிதழ் மற்றும் பிற அதிகாரபூர்வ ஆவணங்களில் தங்களது முதல் பெயரை மாற்றிக் கொள்ளலாம். இதன்படி இதுவரை தேசிய அளவிலான இணையதளம் வாயிலாக 3834 திருநங்கைகளுக்கு, திருநங்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளின் நலனுக்காக விரிவான மறுவாழ்வுக்கான துணைத் திட்டங்கள் உட்பட  “SMILE - Support for Marginalized Individuals for Livelihood and Enterprise”,  என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

 ***


 


(Release ID: 1781873) Visitor Counter : 6062
Read this release in: English , Urdu , Bengali , Telugu