நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ 17 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

प्रविष्टि तिथि: 14 DEC 2021 5:33PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதி இணை அமைச்சர் திரு. பகவத் கிசன்ராவ் காரட் கீழ் காணும்  தகவல்களை அளித்தார்.

 2015 ஏப்ரலில் பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து , ரூ 17 லட்சம் கோடி மதிப்பிலான 32.11 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டு, ரூ 16.50 லட்சம் கோடி வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரவாதம் அளிப்பவர் அல்லது பிணையம் தேவை இல்லை, எளிமையான ஆவணங்கள், விரைவான செயலாக்கம் மற்றும் கடனளிப்பவர்களின் செயல்திறன் மிக்க அணுகுமுறை ஆகியவை பிரதமரின் முத்ரா திட்ட கடன்களை கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன.

பிரதமரின் முத்ரா திட்ட கடன்கள், வணிகத்தின் நோக்கத்தையும் லாபத்தையும் அதிகரிக்க உதவியுள்ளன;சிறுகடை  உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் வணிகத் திறன் மற்றும் அவர்களின் செயல்பாட்டு மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்ய ஷிஷு கடன்கள் உதவுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781403

                                         *****************

 


(रिलीज़ आईडी: 1781553) आगंतुक पटल : 297
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu