சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமான வரம்பு நிர்ணயம்.
Posted On:
14 DEC 2021 4:34PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர். வீரேந்திர குமார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
எஸ்.சி, எஸ்.டி மற்றும் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் வராதவர்கள் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள், இட ஒதுக்கீட்டின் பலனை பெற பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.
இதே வருமான வரம்பைதான், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பயனாளிகளை தீர்மானிக்க, அரசு பின்பற்றுகிறது.
மேம்பட்ட நிலையில் உள்ள ஓபிசி விண்ணப்பதாரர்களை(கிரீமி லேயர்) தீர்மானிப்பதற்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை தீர்மானிப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனை முற்றிலும் வேறானது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781353
************
(Release ID: 1781475)