சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகையில் மாற்றம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 DEC 2021 4:43PM by PIB Chennai

எஸ்சி பிரிவு மாணவர்களுக்கான மெட்ரிக்குலேஷனுக்கு பிந்தைய கல்வி உதவித் தொகை திட்டம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாற்றியமைக்கப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட முக்கிய விதிமுறைகள் வருமாறு:

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான மாற்றியமைக்கப்பட்ட நிதிமுறை 60-40 என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (வடகிழக்கு மாநிலங்களுக்கு 90-10) முழு உதவித் தொகையும், மாணவர்களின் வங்கிக் கணக்கில் டிபிடி முறையில் மட்டுமே வழங்கப்படும். மிகவும் ஏழைமையான எஸ்சி குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தரமான கல்வி நிறுவனங்கள் விஷயத்தில் கவனம் செலுத்தப்படும். இடைநிற்றல் மாணவர்களை ஊக்குவிக்க விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

2021-22-ல் இந்தத் திட்டத்தின் கீழான ஒதுக்கீடு ரூ.3415.62 கோடியாக அதிகரிக்கப்பட்டது. தேவை அடிப்படையில் உதவித் தொகை வழங்கப்படுவதால் மாநில வாரியான ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781366

*****

 


(வெளியீட்டு அடையாள எண்: 1781450) வருகையாளர் எண்ணிக்கை : 247
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu