பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்பு

Posted On: 13 DEC 2021 3:02PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் திருமதி கீதா என்கிற சந்திரபிரபாவின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

சாதகமான மற்றும் நேர்மறையான கடல்சார் சூழலை உறுதி செய்வதற்காக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான, சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகள் சார்ந்த ஒழுங்கை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டில்  1982-ல் பிரதபலிக்கப்பட்ட கப்பல் மற்றும் விமான போக்குவரத்திற்கான சுதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான தடையற்ற வர்த்தகத்தை இந்தியா ஆதரிக்கிறது,

பெருங்கடல்களின் சர்வதேச சட்ட ஒழுங்கை நிறுவும் ஐக்கிய நாடுகள் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டிற்கு இந்தியா மிகுந்த மரியாதை அளிக்கிறது.

பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (சாகர்) என்ற அரசின் கொள்கைக்கு இணங்க, பிராந்திய பங்காளிகளுடன் இந்தியா தனது கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியா பாடுபடுகிறது.

பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய மற்றும் கூட்டுறவு முறையில் மேம்படுத்துவதற்காக பலதரப்பு பயிற்சிகள், கூட்டு கண்காணிப்பு, ஒருங்கிணைந்த ரோந்து போன்றவற்றில் பிராந்திய படைகளுடன் இந்தியா ஈடுபடுகிறது.

பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்காக ஆசியான் பிராந்திய மன்றம், கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு பிளஸ் போன்ற கட்டமைப்புகளிலும் இந்தியா பங்கேற்றது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780870

*******


(Release ID: 1780956) Visitor Counter : 156


Read this release in: English , Urdu