பாதுகாப்பு அமைச்சகம்
கயா ஆபிசர்ஸ் பயிற்சி அகாடமியில் 81 வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்தனர்
Posted On:
11 DEC 2021 7:21PM by PIB Chennai
கயாவில் உள்ள ஆபிசர்ஸ் பயிற்சி அகாடமியில் நடைபெற்ற 20-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் , நட்பு நாடுகளைச் சேர்ந்த 9 பேர், சிறப்பு கமிஷன்ட் அதிகாரிகள் பயிற்சி ( எஸ்சிஓ)_47 முடித்த 18 அதிகாரிகள் உட்பட தொழில்நுட்ப நுழைவு திட்டம் ( டிஇஎஸ்)_38 முடித்த அதிகாரிகள் 81 பேர் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பை மரியாதையை கயா ஓடிஏ-வின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் ஜி ஏ வி ரெட்டி பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.
பயிற்சி காலத்தில் திறமையுடன் செயல்பட்ட வீரர்களுக்கு 'ஸ்வோர்ட் ஆப் ஆனர்' எனப்படும் கௌரவ வாள் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. பயிற்சியை நிறைவு செய்து பணியில் சேரவுள்ள வீரர்களைப் பாராட்டிய லெப்டினன்ட் ஜெனரல் ஜி ஏ வி ரெட்டி, பணியில் சேர்ந்து தங்களது நாட்டுக்கும், பயிற்சி அகாடமிக்கும் பெருமை சேர்க்கும் வகையில், தன்னலமற்ற, அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் தொழில் நிபுணத்துவத்துடன் சேவைபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780517
****
(Release ID: 1780546)
Visitor Counter : 150