வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
10 DEC 2021 6:42PM by PIB Chennai
வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திருமதி அனுபிரியா படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
மத்திய வர்த்தக துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா) அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரசி ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான உதவிகளை அபெடா வழங்கி வருகிறது. பல வகை அரிசி ஏற்றுமதியை ஊக்குவிக்க அபெடாவின் கீழ் ஏற்றுமதி வளர்ச்சி அமைப்பும் (இபிஎப்) உருவாக்கப்பட்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டில் கடந்த ஜனவரி வரை 3526.33 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பாசுமதி அல்லாத அரிசிகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780250
*************
(रिलीज़ आईडी: 1780349)
आगंतुक पटल : 199