எரிசக்தி அமைச்சகம்
மின்சார அமைச்சகம் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது
Posted On:
10 DEC 2021 4:20PM by PIB Chennai
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எரிசக்தித் திறன் சேவைகள் நிறுவனத்தின் உபநிறுவனமான ஒருங்கிணைந்த எரிசக்தி சேவைகள் நிறுவனம் கிராம உஜாலா திட்டத்தை விரிவுப்படுத்த உள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ், எல்இடி பல்புகள், 10 ரூபாய் என்ற மிகக் குறைந்த மானிய விலையில் பீகார், உத்தரப்பிரதேசம். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 7,579 கிராமங்களுக்கு வழங்கப்படும்.
2021 மார்ச் மாதம் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங்கால் தொடங்கப்பட்ட இத்திட்டம் ஏற்கனவே பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 33,00,000-க்கும் அதிகமான எல்இடி பல்புகளை விநியோகித்துள்ளது. டிசம்பர் 14ம் தேதி முதல் இத்திட்டம் இதர 3 மாநிலங்களில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780138
(Release ID: 1780346)
Visitor Counter : 225