விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏற்றுமதி மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்

Posted On: 10 DEC 2021 6:52PM by PIB Chennai

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை உயர்த்துவதும் ஒரு அம்சமாகும். வேளாண் ஏற்றுமதி விரிவான சர்வதேச சந்தையை விவசாயிகள் அணுக உதவுவதுடன் அவர்களது வருமானத்தையும் அதிகரிக்கும்.

2020-ஆம் ஆண்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் தமிழகம் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை, 2018-19-ல் 8,163.70 கோடிக்கும் 2019-20-ல் 7,522.56 கோடிக்கும், 2021-ல் 9,701.49 கோடிக்கும் மேற்கொண்டுள்ளது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780273

----

 


(Release ID: 1780341) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Manipuri