சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் 70 புதிய மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன

प्रविष्टि तिथि: 10 DEC 2021 4:37PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் அங்குள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படும் வகையில் புதிய மருத்துவ கல்லூரிகளை மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அமைத்து வருகிறது. 

இந்த நடவடிக்கை பின்தங்கிய பகுதிகளில் சுகாதார சேவையை மேம்படுத்த உதவும்.  இத்திட்டத்தின் கீழ் 157 புதிய மருத்துவ கல்லூரிகளை 3 கட்டங்களாக அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் 70 மருத்துவ கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

மூன்றாவது கட்ட பணியில், தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மற்ற மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளின்  விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780153

                                                       **************

 

 


(रिलीज़ आईडी: 1780330) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi