விவசாயத்துறை அமைச்சகம்
2020-21-ஆம் நிதியாண்டில் தமிழகம் 698 மெட்ரிக் டன் பாமாயில் எண்ணெய்யை உற்பத்தி் செய்துள்ளது
Posted On:
10 DEC 2021 6:51PM by PIB Chennai
2020-21-ஆம் நிதியாண்டில் தமிழகம் 698 மெட்ரிக் டன் பாமாயில் எண்ணெய்யை உற்பத்தி செய்துள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்ஃ
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், அகில இந்திய அளவில் 2,88,056 மெட்ரிக் டன் பாமாயில் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் இதில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் அதிக அளவிலான பங்களிப்பை செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். நுண்ணுயிர் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில், தேசிய உணவு எண்ணெய் – பாமாயில் எண்ணெய் திட்டத்தின் கீழ், குறைந்த அளவு தண்ணீர் பயன்பாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய எண்ணெய் வித்துக்களில் ஒன்றான பனை விதைகளை உற்பத்தி செய்ய அரசு ஊக்கமளித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780271
(Release ID: 1780319)
Visitor Counter : 260