சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான நிதி உதவி: தமிழகத்திற்கு ரூ 239.80 கோடி வழங்கப்பட்டது
Posted On:
10 DEC 2021 4:29PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து கொவிட்-19-ஐ எதிர்கொள்ளும் முயற்சியில் மாநிலங்களுக்கு இந்திய அரசு ஆதரவளித்து வருகிறது. கொவிட்-19 மற்றும் பிற பொது சுகாதார அவசரநிலைகளுக்கு எதிரான தயார்நிலை மற்றும் திறன்களை மேம்படுத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படுகிறது.
கொவிட்-19 மேலாண்மைக்கான தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குவதற்கும், சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், மருந்துகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கும் மத்திய அரசால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கு 2020-21-ல் ரூ 868.09 கோடியும், 2021-22-ல் ரூ 239.80 கோடியும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு 2020-21-ல் ரூ 23.35 கோடியும், 2021-22-ல் ரூ 2.71 கோடியும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780144
**********
(Release ID: 1780296)
Visitor Counter : 146