நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
2014 முதல் 2021 வரையிலான காலத்தில் 4.28 கோடி போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
10 DEC 2021 3:32PM by PIB Chennai
2014 முதல் 2021 வரையிலான காலத்தில் 4.28 கோடி போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன என்று நுகர்வோர் நலன் உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக முறையின் சீர்திருத்தங்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, ரேஷன் அட்டைகளின் தரவுகள் டிஜிட்டல் மயம், போலி அட்டைகளை நீக்குதல், நிரந்தரமான குடிபெயர்வு, இறப்புகள், தகுதியற்ற / ஒரே பெயரில் 2 அட்டைகள் போலி அட்டைகள் கண்டறிதல் போன்றவற்றால் 4 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் தெரிவித்தார்.
குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டைகளை இணைக்காத நிலையில் எந்த குடும்ப அட்டையும் ரத்து செய்யப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் 2021 டிசம்பர் 31 வரை ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கூறினார். அதுவரை ரேஷன் அட்டைகளுக்கு பொருள்கள் வழங்குவதை மறுக்கக்கூடாது என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1780171)
வருகையாளர் எண்ணிக்கை : 220