உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய உணவு தொழில்துறையின் வளர்ச்சி: தமிழகம் குறித்த புள்ளிவிவரங்கள்

Posted On: 10 DEC 2021 1:15PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில்  இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

2014-15-ல் $36.18 பில்லியனாக இருந்த மொத்த வேளாண்-உணவு ஏற்றுமதி 2020-21ல் $38.32 பில்லியனாக 0.96 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி வீதத்தில் வளர்ந்துள்ளது.

2014-15-ல் 1.34 லட்சம் கோடி ரூபாயாக இருந்த உணவு பதப்படுத்துதல் துறையின் மொத்த மதிப்பு கூட்டல் 2019-20ல் 10.8 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி வீதத்துடன்  ரூ 2.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, தொழில்துறையின் ஆண்டு ஆய்வு (2018-19) வாயிலாக தெரியவந்துள்ள உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உற்பத்தியின் கடந்த மூன்று ஆண்டு கால மொத்த உற்பத்தி விவரங்கள் பின்வருமாறு:

அகில இந்திய அளவில் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உற்பத்தி 2016-17-ல் ரூ 10,94,982.05 கோடியாகவும், 2017-18-ல் ரூ 11,86,496.47 கோடியாகவும், 2018-19-ல் ரூ 12,76,987.89 கோடியாகவும் இருந்தது.

தமிழ்நாட்டை பொருத்தவரை உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உற்பத்தி 2016-17-ல் ரூ 92,550.15 கோடியாகவும், 2017-18-ல் ரூ 1,00,515.63 கோடியாகவும், 2018-19-ல் ரூ 90,747.80 கோடியாகவும் இருந்தது.

புதுச்சேரியில் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உற்பத்தி 2016-17-ல் ரூ 2319.29 கோடியாகவும், 2017-18-ல் ரூ 3117.54 கோடியாகவும், 2018-19-ல் ரூ 3051.87 கோடியாகவும் இருந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780033

-----


(Release ID: 1780166)
Read this release in: English , Malayalam