உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

ஊரகப்பகுதிகளில் உணவுப்பதன தொழி்ற்கூடங்கள் அமைப்பு தமிழ்நாட்டிற்கு ரூ.14,60,05,000 விடுவிக்கப்பட்டுள்ளது

Posted On: 10 DEC 2021 1:18PM by PIB Chennai

நாட்டின் ஊரகப்பகுதிகளில் உணவுப்பதன தொழிற்கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட உணவுப்பதன துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 2016-17 லிருந்து பிரதமரின் விவசாய வளர்ச்சி மற்றும் பதப்படுத்துதல் திட்டத்தை உணவு பதன தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

  இதன் ஒரு பகுதியாக 2020-21 நிதியாண்டில் இருந்து 2024-25 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டுடன் நாடு முழுவதும் நிதி, தொழில்நுட்பம், வர்த்தக ஆதரவுடன்
சிறிய அளவிலான 2 லட்சம் உணவு பதன தொழிற்கூடங்களை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதலை இந்த அமைச்சகம் அமலாக்கி வருகிறது.

இந்தத் திட்டத்தின் படி 30.11.2021 வரை தமிழ்நாட்டிற்கு ரூ.14,60,05,000 விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.9,26,344 செலவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ.1,85,40,000 விடுவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                            *****
 



(Release ID: 1780119) Visitor Counter : 130


Read this release in: English , Manipuri , Bengali