பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2030-ஆம் ஆண்டுக்குள் எரிசக்தியில் இயற்கை வாயுவை 15 சதவீதம் அளவக்கு கலக்க அரசு இலக்கு நிர்ணயம்

प्रविष्टि तिथि: 09 DEC 2021 4:24PM by PIB Chennai

எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை தற்போதைய 6.7 சதவீதத்திலிருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.

மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த இலக்கை எட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.     

பல்வேறு துறைகளில் இயற்கை வாயுவின் தேவையைக் கருத்தில் கொண்டு, வருங்காலத்தில் திரவ இயற்கை வாயுவின் விலை குறைய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779741

----


(रिलीज़ आईडी: 1779839) आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu