குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிதியுதவி
Posted On:
09 DEC 2021 4:30PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தேசிய சிறு தொழில்கள் கழகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் மூலப்பொருள் தேவையை பூர்த்தி செய்ய பொருட்களை வாங்குவதற்கு மொத்த உற்பத்தியாளர்கள் மூலம் ஏற்பாடு செய்வதோடு மூலப்பொருள் உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவியையும் வழங்குகிறது.
2019-20 நிதியாண்டில் 2842 நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டு ரூ 524495.62 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. 2020-21 நிதியாண்டில் 2699 நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டு ரூ 439843.75 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. 2021-22 நிதியாண்டில் 2455 நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டு ரூ 308303.03 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அமைச்சகம் செயல்படுத்துகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கம் திட்டம், பாரம்பரியத் தொழில்களின் மறுமலர்ச்சிக்கான நிதித் திட்டம், ஆஸ்பையர் திட்டம், வட்டி மானியத் திட்டம் ஆகியவை இவற்றில் அடங்கும்.
சிறப்புக் கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியத் திட்டத்தின் கீழ் பட்டியல்-பழங்குடி பிரிவை சேர்ந்த 849 தொழில்முனைவோருக்கு ரூ 88.24 கோடி இது வரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1779752
(Release ID: 1779802)
Visitor Counter : 178