ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மருத்துவ உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஒப்புதல்கள்
Posted On:
09 DEC 2021 2:59PM by PIB Chennai
போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை, உள்நாட்டு விநியோகச் சங்கிலி மற்றும் சரக்கு போக்குவரத்து, அதிக நிதிச் செலவு, போதிய மின்சாரம் கிடைக்காமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றில் குறைந்த கவனம் செலுத்துதல் உள்ளிட்டவற்றால் இந்திய மருத்துவ சாதனத் துறை பாதிக்கப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் மருத்துவ சாதனத் துறையில் பெரியளவு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மருந்துகள் துறை அறிமுகப்படுத்தியது. ரூ 3,420 கோடி மொத்த மதிப்பீட்டில் 2020-21 முதல் 2027-28 வரை இது செயல்படுத்தப்படும்.
முதல் சுற்றில் இத்திட்டத்தின் கீழ் 23 விண்ணப்பதாரர்களிடமிருந்து 28 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கான சில இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.08.2021 என மீண்டும் நிர்ணயிக்கப்பட்டு, 14 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
25.11.2021 அன்று நடைபெற்ற அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் 9-வது கூட்டத்தில், திட்ட வழிகாட்டுதல்களின்படி அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்த பிறகு, பின்வரும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பிலிப்ஸ் குளோபல் பிஸினஸ் சர்வீசஸ், அலைடு மெடிக்கல் லிமிடெட், டெக் மவுண்ட் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், மைக்ரோடெக் நியூ டெக்னாலஜீஸ், மெரில் ஹெல்த்கேர், என்விஷன் சயின்டிஃபிக், பயோ இந்தியா இண்டெர்வென்ஷனல் டெக்னாலஜிஸ்.
இவற்றின் எட்டு ஆலைகளில் ரூ 260.40 கோடி முதலீடு செய்யப்படும், 2,599 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1779693
(Release ID: 1779798)
Visitor Counter : 211