சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பற்றாக்குறையாக உள்ளன முதியோர் இல்லங்கள் : தமிழகத்தில் 66 இல்லங்கள்

Posted On: 08 DEC 2021 5:30PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் சுஷ்ரி பிரதிமா பவுமிக் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நம் நாட்டில் முதியோர்களுக்கான கவனிப்பை பெரும்பாலும் குடும்பங்களே வழங்குகின்றன. ஆனாலும், ஆதரவற்ற முதியோர்களை கவனிக்க தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் நிதியதவி அளிக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தது ஒரு முதியோர் இல்லத்துக்கு அரசு நிதியுதவி அளிப்பது நோக்கமாக உள்ளது.

தற்போது மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், 551 முதியோர் இல்லங்கள் உள்ளன. அடல் வயோ அப்யுதே திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 66 முதியோர் இல்லங்கள் உள்ளன. ஒவ்வொரு இல்லத்தையும் திட்ட கண்காணிப்பு குழு ஆய்வு செய்கிறது. ஆய்வின்போது, அனைத்து புகார்களும் விசாரிக்கப்படுகின்றன. வழிகாட்டுதல்களை ஒழுங்காக பின்பற்றாத 94 முதியோர் இல்லங்களுக்கு மானிய உதவி ரத்து செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779356

                                                                                 *************

 

 


(Release ID: 1779485)
Read this release in: English