பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல்

Posted On: 08 DEC 2021 3:44PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஸுபின் இரானி கீழ்க்காணும் தகவல்களை அளித்தார்.

ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் பற்றிய தகவல்களைத் தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகம் தொகுத்து வெளியிடுகிறது, அதன் வெளியீடான "க்ரைம் இன் இந்தியா" 2020-ம் ஆண்டு வரை https://ncrb.gov.in எனும் இணையதளத்தில் கிடைக்கும்.

2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பெண்கள் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் குழந்தைகள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) கடத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

2018-ல் 1064 பெண்கள் மற்றும் 941 குழந்தைகளும், 2019-ல் 923 பெண்கள் மற்றும் 883 குழந்தைகளும், 2020-ல் 784 பெண்கள் மற்றும் 750 குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. கடத்தல்களின் எண்ணிக்கை கடந்த 3 வருடங்களாக குறைந்துள்ளதை தரவுகள் காட்டுகின்றன.

இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ்  "காவல்துறை" மற்றும் "பொது ஒழுங்கு" ஆகியவை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வருகின்றன. சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை விசாரணை செய்வது போன்ற பொறுப்புகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு உள்ளன.

இருப்பினும், பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் துணைபுரிகிறது.

"ஆள் கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா" என்ற தலைப்பில் விரிவான சட்டம் ஒன்றை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779262   

•••••••••••••••••



(Release ID: 1779471) Visitor Counter : 164


Read this release in: English , Bengali