விண்வெளித்துறை
வெப்பநிலை உயர்வால் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து சிறு தீவு நாடுகளை பாதுகாக்க தேவையான தொழில்நுட்பங்களை இஸ்ரோ பெற்றுள்ளது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
प्रविष्टि तिथि:
08 DEC 2021 4:36PM by PIB Chennai
வெப்பநிலை உயர்வால் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து சிறு தீவு நாடுகளை பாதுகாக்க, புயல் முன்னெச்சரிக்கை, கடலோர பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதற்கு தேவையான தொழில்நுட்பங்களை இஸ்ரோ கொண்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள வளரும் சிறுதீவு நாடுகள் சிலவற்றுக்கு இத்தகைய தகவல்களை வழங்க இஸ்ரோ முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிஜி, ஜமைக்கா, மொரிஷியஸ் ஆகிய நாடுகள் வலுவான தீவு நாடுகளுக்கான உள்கட்டமைப்பு என்னும் இந்த முன்முயற்சியை, கிளாஸ்கோவில் நடைபெற்ற 26-வது சிஓபி எனப்படும் பருவநிலை தொடர்பான அனைத்து நாடுகள் மாநாட்டில் மேற்கொண்டன.
58 வளரும் சிறுதீவு நாடுகளுக்கு தேவை அடிப்படையில் ஆதரவை இந்த முன்முயற்சி வழங்கும் என அமைச்சர் கூறினார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779308
*****
(Release ID:1779308)
(रिलीज़ आईडी: 1779391)
आगंतुक पटल : 200